;
Athirady Tamil News

சுகாதார தொண்டர்களாக பணியாற்றாதவர்களும் செல்வாக்குகளை பயன்படுத்தி விண்ணப்பிக்கின்றனர்- குற்றச்சாட்டு..!! (வீடியோ)

0

வடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய உள்ள 820 சுகாதார தொண்டர்களையும் உள்ளீர்த்த பின்னரே மேலதிகமாக தெரிவு செய்ய வேண்டும் என வவுனியா மாவட்ட சுகாதார தொண்டர்கள் தெரிவித்தனர்.
(03) வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

1994 தொடக்கம் இன்று வரைக்கும் வடக்கின் 5 மாவட்டங்களிலும் சுகாதார தொண்டர்களாக நாம் கடமையாற்றி வந்துள்ளோம். 2017 ம் ஆண்டு நாம் எமது நிரந்தர நியமனத்தை கோரி 118 நாட்டகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தோம். அந்த நிலையில் அரசதலைவர் மற்றும் பிரதமர் இவடமாகாண ஆளுநர்இ முதலமைச்சர் மத்திய சுகாதார அமைச்சர் ஆகியோரை சந்தித்து எமது விடயம் தொடர்பாக எழுத்து மூலமான ஆவணங்களை வழங்கினோம்.

மாவட்ட செயலகங்களில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் தலைமையிலான கூட்டங்களிலும் எங்களுடைய விடயம் தொடர்பாக ஆக்கபூர்வமான தீர்மானம் எடுக்கப்பட்டது அதன்படி வடக்கில் மொத்தமாகவுள்ள 820 சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்றும் அவர்களது தகவல்களை சேகரிக்குமாறும்இமேலதிகமாக தேவைப்படும் ஆளணி தொடர்பான தகவல்களையும் சேகரிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சினூடாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.ஆனால் தற்போது அந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளிடம் நாம் சென்று கேட்டால் தேவையான ஆளணி கணக்கெடுப்பு செய்து முடிக்கவில்லை என்று கூறுகிறார்கள்

இன்று வரை அந்த ஆளணி கணக்கெடுப்பு செய்யப்படாத நிலையில் மத்திய அரசால் 16-03-2018 ம் திகதி வெளியிட பட்டுள்ள வர்த்தமானியில் சுகாதார உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றாதவர்கள் கூட செல்வாக்குகளை பயன்படுத்தி விண்ணப்பித்து வருகின்றனர்.

கல்வித்தகமை வயது எல்லை கணக்கில் எடுக்காமல் சேவைக்காலத்தின் அடிப்படையில் எம்மை உள்ளீர்ப்பதாகவும் அதன் பிறகே மேலதிக வெற்றிடங்களுக்கு ஆளணிகளை உள்வாங்குவது என்றும் பலமுறை அரச அதிகாரிகளால் எமக்கு வாக்குறுதி வழங்கப்பட்டு பின்னர் இந்த வர்த்தமானி அறிவித்தல் வந்துள்ளது இது அநீதியான செயற்பாடாகும்.

எனவே வடக்கில் உள்ள 820 சுகாதார தொண்டர்களையும் உள்ளீர்த்த பின்னரே ஏனையோரை தெரிவு செய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளதுடன் எமது நிலையை கருத்தில் கொண்டு எமக்கான ஆக்கப்பூர்வமான தீர்வை பெற்று தருமாறு சம்பந்த பட்ட தரப்பினரிடம் நாம் வேண்டுகின்றோம் என தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + thirteen =

*