;
Athirady Tamil News

நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் சடலம் மீட்பு..!!

0

கண்டி நீதிமன்ற கட்டிட வளாகத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சடலம் ஒன்று இன்று (04) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் தெஹியானோவில, மேத எலன பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற பாலத்திலிருந்து விழுந்த நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − nineteen =

*