;
Athirady Tamil News

மக்களுக்கு கிடைத்த வாழ்வாதார திட்டத்தை திருப்பி அனுப்பிய துணுக்காய் பிரதேச செயலாளர்- மக்கள் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

துணுக்காய் பிரதேச செயலருக்கு எதிராக உயிலங்குளம் மாதிரி கிராம மக்கள் பிரதேச செயலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர்.

தமது பகுதிகளில் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்திகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டு தடுப்பு முகாமில் இருந்த மக்களுக்கனா வாழ்வாதார உதவிகள் என்பவற்றில் பிரதேச செயலாளர் அவர்கள் பாரபட்சம் காட்டுவதாகவும் துணுக்காய் பிரதேச செயலகத்துக்கு கடந்த வருடம் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பெருமளவிலான நிதி திரும்பி சென்றதையும் சுட்டிக்காட்டி அதனை உடனடியாக நிறுத்துமாறும் பாரபட்சமற்ற வகையில் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என கோரியும் அவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிலங்குளம் பகுதியில் தம்மை மீள்குடியமர்த்தி ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமக்கான எந்தவெரு அடிப்படை வசதிகளையும் இந்த பிரதேச செயலாளர் செய்து தரவில்லை எனவும் குறிப்பாக தம்மை மட்டும் இப்பிரதேச செயலர் புறக்கணிப்பதாகவும் மக்கள் சேவையில் பாரபட்சம் காட்டுவதாகவும் கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + nine =

*