;
Athirady Tamil News

அமெரிக்காவில் இடைக்கால நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்..!!

0

நியூயார்க் நகரில் அமைந்துள்ள சிவில் நீதிமன்ற இடைக்கால நீதிபதி மற்றும் குடும்ப நல நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளின் நியமனம் தொடர்பான அறிவிப்பாணையை நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோ இன்று வெளியிட்டார்.

அதில் தீபா அம்பேகர் சிவில் நீதிமன்ற இடைக்கால நீதிபதியாக அவர் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார். தீபா அம்பேகர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்த பின்னர் சட்டம் பயின்றவர். அதன்பின் நியூயார்க் நகர சபையில் மூத்த சட்ட வழக்கறிஞராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அதற்கு முன்னதாக குற்றவியல் பாதுகாப்பு பிரிவு, சட்ட உதவி மையம் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் போன்றவற்றில் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமும் உடையவர் ஆவார்.

மேலும் அமெரிக்காவில் நீதிபதியாகியுள்ள இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையையும் தீபா அம்பேகர் பெற்றுள்ளார். அவருக்கு முன்பாக அமெரிக்காவில் 2015ம் ஆண்டு சென்னையை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndianAmerican #Deepa Ambekar #interimjudge

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − nine =

*