;
Athirady Tamil News

போலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு..!!

0

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு கடந்த 2013-ம் நடைபெற்ற தேர்தலில் தில்லுமுல்லு மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி மற்றும் தாஹிருல் காத்ரி தலைமையிலான பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் லாகூர் நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறையின்போது இஸ்லாமாபாத் நகர போலீஸ் சூப்பிரண்ட் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.

இந்த தாக்குதலையும், வன்முறையையும் தூண்டி விட்டதாக இம்ரான் கான் உள்ளிட்டவர்கள் மீது இஸ்லாமாபாத் நகரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது, இம்ரான் கான் நிரபராதி என்று தீர்ப்பளித்த நீதிபதி ஷாருக் அர்ஜுமன்ட் இவ்வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக அறிவித்தார். #tamilnews #ImranKhanacquitted

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*