;
Athirady Tamil News

சோமாலியாவில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செவிலியரை கடத்திய பயங்கரவாதிகள்..!!

0

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள மருத்துவ உதவி முகாமில் சேவையில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செவிலியரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.

சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக சோமாலியாவில் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பொதுமக்கள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் சோமாலியாவில் முகாமிட்டுள்ளனர்.

இப்படி வருபவர்களை அல் ஷபாப் பயங்கரவாதிகள் பணத்துக்காக கடத்தி செல்வதும் கொலை செய்வதும் அங்கு வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இயங்கிவரும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றி வந்த பென் செவிலியர் ஒருவரை பயங்கரவாதிகள் நேற்று கடத்தி சென்றுள்ளனர். #tamilnews #Gunmenkidnap #nurseSomalia

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 2 =

*