;
Athirady Tamil News

பொது இடத்தில் மது குடித்தவர்களை தட்டிக் கேட்ட இருவர் சுட்டுக் கொலை..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி மாவட்டத்தில் சாரநாத் அருகேயுள்ள ராஜ்நஹியா பகுதியில்
நேற்றிரவு பசந்தா யாதவ் மற்றும் அவரது மருமகன் ராஜேஷ் ஆகியோர் தெருவோரம் கோழி முட்டை விற்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 4 பேர் முட்டை கடையின் அருகில் பொது இடத்தில் மது குடிக்க தொடங்கினர். இதற்கு பசந்தா யாதவும், ராஜேஷும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்பினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் அங்கிருந்து நகர்ந்து சென்ற அவர்கள் பின்னர் திரும்பி வந்து, பசந்தா யாதவ், ராஜேஷ் ஆகியோரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதில் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். #2shotdead #drinkinginpublic

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 8 =

*