;
Athirady Tamil News

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு..!!

0

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட கரன் மாவட்டத்தில் ஒரு தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் மொபைல் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அப்பகுதிக்கு நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த ஆறு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் பஞ்பாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #Pakistan #Balochistan

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − twelve =

*