;
Athirady Tamil News

ஒடிசா விமான நிலையத்தில் சூட்கேஸ் சக்கரத்தில் மறைத்து தங்கம் கடத்தியவர் கைது..!!

0

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி அவரை சோதனையிட்டனர்.

அவரது சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அந்த நபர் சூட்கேசின் சக்கரங்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நபர் கடத்த முயன்ற சுமார் 300 கிராம் அளவிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்கம் கடத்தல் வழக்கில் அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் கடத்த முயன்ற தங்கத்தின் மதிப்பு ரூ.9.64 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BhubanewswarAirport #GoldSmuggling #Odisha

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*