;
Athirady Tamil News

யாழில் பிறந்து மூன்றே நாளேயான சிசுவிற்கு ஏற்பட்ட நிலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!!

0

யாழில் பிறந்து மூன்றே நாளான சிசுவை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிசுவின் தாயாரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளதுடன் ஏனைய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நேற்றைய தினம்(04) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.தொண்டமானாறு பகுதியில் வாழ்ந்து வரும் திருமணமாகாத இளம் பெண்ணொருவருக்கும்,குறித்த இளம் பெண்ணின் தமக்கையாரின் கணவருக்குமிடையில் முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கர்ப்பமடைந்த யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரகசியமான முறையில் குழந்தை பிரசவித்துள்ளார்.

குழந்தை பிறந்த விடயத்தை மறைப்பதற்காக மூன்றே நாட்களான குறித்த சிசுவை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையை வாங்கிய பெண் சுமார் இரு மாதங்களின் பின் இந்தவிடயம் தொடர்பாகச் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையூடாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையை விற்பனை செய்த தாயார், அவருக்கு உதவிய நோயாளரைப் பராமரிக்கும் பெண் பராமரிப்பாளர், குழந்தையின் தந்தை ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

குழந்தையின் தாயாரைப் பிணையில் விடுவித்து உத்தரவிட்ட மேலதிக நீதவான் ஏனைய இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், தாயாரையும், குழந்தையையும் நம்பிக்கை இல்லத்தில் சேர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + fifteen =

*