;
Athirady Tamil News

யாழில் தேசிய மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு கலந்துரையாடல்..!!

0

யாழ். நகரை பசுமைப் படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

அடுத்த மாதம் 5ஆம் திகதி தேசிய மரம் நடுகை தினமாகும். அன்றைய தினத்தில் பொருத்தமான இடங்களில் பொருத்தமான மரங்களை நடுவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ். நகரபிதா ஆனோல்ட் மற்றும் விவசாய அமைச்சர் சிவநேசன் ஆகியோர் இணைந்து, ஆளுநர் செயலகம் உட்பட அனைத்து திணைக்களங்களின் பங்களிப்புடன் யாழ். நகரை பசுமைப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வட. மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், யாழ். மாநகர நகரபிதா இம்மானுவேல் ஆனோல்ட், மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து, விவசாய திணைக்கள அதிகாரிகள், வனவளத்திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நீர்பாசனத்திணைக்களம், முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள் சாரணர் மற்றும் லயன்ஸ் கழகங்கள் ஆகியன கலந்து கொண்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*