;
Athirady Tamil News

மருந்து வகைகளை இணையத்தளத்தில் பதிவு செய்யும் வசதி..!!

0

தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் மூலம் மேற்கொள்ளப்படும் மருந்து பதிவு தொடர்பான அனுமதி பத்திரம் உள்ளிட்ட சேவைகளை இணையத்தளம் மூலமாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மருந்து வகைகளை பதிவு செய்தல், அனுமதி பத்திரம் வழங்கல், வைத்திய உபகரணங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல சேவைகள் மிகவும் செயத்திறனான ஒழுக்க விதிமுறைக்கு அமைய இதனூடாக மேற்கொள்ளப்படும்.

இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையம் மூலம் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் கீழ் இது முன்னெடுக்கப்படவுள்ளது.

விசேடமாக மருந்து வகைகளை பதிவு செய்யும் போது அதற்கான அனுமதி பத்திரம் விநியோகம் தொடர்பில் ஏற்படும் கால தாமத்தை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

அது மாத்திரமின்றி துரிதமான சட்ட விதிமுறைக்கு அமைவாக இந்த பணிகளை மேற்கொள்ள முடியும் என்று தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் அஸித டி சில்வா தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*