;
Athirady Tamil News

முதல் முறையாக சர்வதேச இறப்பர் மாநாடு இலங்கையில்..!!

0

சர்வதேச இறப்பர் மாநாடு World Rubber Summit இம்மாதம் 7ம் 8ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் தலைமையில் சர்வதேச இறப்பர் ஆய்வுக்குழுவின் (The International Rubber Study Group (IRSG)) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2018 இறப்பர் மாநாடு தடைகளை முறியடித்து நிலையான அபிவிருத்தியை நோக்கி “Breaking Barriers towards Sustainable Growth’’ என்ற தலைப்பில் இம்முறை முதல் முறையாக இலங்கையில் நடைபெறவுள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் 36 அங்கத்துவ நாடுகளின் பங்களிப்புடன் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இறப்பர் தொழிற்றுறையுடன் தொடர்புபட்ட இறப்பர் உற்பத்தி நாடுகள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், இரசாயன துறையைச்சார்ந்தோர், தயாரிப்பாளர்கள், தனியார் துறையினர், அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பிதிநித்துவப்படுத்தி பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தெற்காசியாவில் முக்கிய கேந்திர நிலையமாக இலங்கை வளர்ச்சியடைந்து வருவதினால் இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவது மாத்திரமின்றி உலகின் இறப்பர் துறையில் இறப்பர் கேந்திர நிலையமாக இலங்கை எதிர்காலத்தில் திகழும் என்பதினால் இந்த மகாநாடு சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று பெருந்தோட்டத்துறை அமைச்சின் ஆலோசகர் லக்ன பரனவிதான தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*