;
Athirady Tamil News

துணை முதல் மந்திரி நிகழ்ச்சியை படம்பிடித்த கேமராமேன் கார் கவிழ்ந்து பலி..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை முதல் மந்திரி கவிந்தர் குப்தா தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் இன்று காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின்தொடர்ந்து மக்கள் தொடர்பு அதிகாரிகளும் மற்றொரு காரில் சென்றனர்.

காங்க்யால் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட கிரேட்டர் கைலாஷ் பகுதியில் மக்கள் தொடர்பு துறையினர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அருகிலுள்ள கால்வாயில் கார் குப்புற கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மக்கள் தொடர்பு துறை கேமராமேன் சூரம் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, துணை முதல் மந்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான கேமராமேன் குடும்பத்தினருக்கு துணை முதல் மந்திரி கவிந்தர் குப்தா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அரசு விழாவை படம் பிடிக்க சென்ற கேமராமேன் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − twelve =

*