;
Athirady Tamil News

டி.வி.க்கு அடிமையான 13 வயது சிறுமியை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்ற உறவினர்கள்..!!

0

கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூருவின் மல்லேஷ்பாலயா பகுதியில் உள்ள மாருதிநகரைச் சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கு 13 வயதில் சரண்யா என்ற மகள் உள்ளார். சரண்யா எப்போதும் டிவி பார்க்கும் மற்றும் செல்போனில் விளையாடும் பழக்கம் கொண்டவர்.

சம்பவத்தன்று காயத்ரி பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது சரண்யா டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அவரை டிவி பார்க்கக்கூடாது என எவ்வளவு கூறியும் சரண்யா கேட்க வில்லை. இதனால் கோபமடைந்த காயத்ரி தன் மகளை அடித்துக்கொன்றார்.

இதுகுறித்து காயத்ரியின் உறவினர் பிரமிளா போலீசில் புகார் அளித்தார். போலீசார் காயத்ரியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காயத்ரி முதலில் தான் கொலை செய்ததாக கூறினார். ஆனால் உண்மையில், காயத்ரியின் உறவினர் பிரமிளா அவர் மகள் ரம்யாவுடன் இணைந்து கொலை செய்தது தெரிய வந்தது.

சரண்யாவின் உடலில் கெட்ட ஆவி இருப்பதாகவும், அதனை விரட்டினால் இனி அவள் டிவி பார்க்க மாட்டாள் என பிரமிளா கூறியுள்ளார். அதனை நம்பிய காயத்ரி சரண்யாவை பிரமிளா வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கு பிரமிளா இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்றார். பின்னர் பலியை காயத்ரியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, பிரமிளா மற்றும் ரம்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 5 =

*