;
Athirady Tamil News

வவுனியாவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்து..!! (படங்கள்)

0

வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (05) பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒமந்தை பொலிஸார் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையிலிருந்து காயமடைந்த பொலிஸார் தப்பியோடியுள்ளார்.

வவுனியாவிலிருந்து பாவற்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேரூந்தின் மீது வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே மன்னார் வீதியுடாக வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.

பொலிசார் தப்பித்து சென்ற முச்சக்கரவண்டியினை(NP -யுயுகு 5039 ) பின் தொடர்ந்து ஊடகவியலாளர் சென்ற சமயத்தில் அவர்களை வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அருகே இறக்கி விட்டு முச்சக்கரவண்டி சென்றுள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் இருந்தவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் வேகமாக சென்ற சமயத்திலேயே பேரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விபத்தினை நேரில் பார்வையிட்டவர்கள் தெரிவித்தனர்.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 5 =

*