;
Athirady Tamil News

இறுதிச் சடங்கில் மாயமான விருது தனியார் பேருந்திற்குள் வந்தது எப்படி?..!!

0

மறைந்த பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின், மதிப்புமிக்க விருது தனியார் பேருந்தொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியவிலிருந்து கடுவெல நோக்கி பயணிக்கும் பேருந்தொன்றின்றிலிருந்து குறித்த விருது இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

1965ஆம் ஆண்டு, இந்தியா – புதுடெல்லியில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கல் விழாவின்போது, கிடைக்கப்பெற்ற ‘ரன்மயூரா’ (தங்க மயில்) விருதே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றுகொண்டிருந்த வேளையிலேயே, கடந்த புதன்கிழமை குறித்த விருது காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*