;
Athirady Tamil News

எங்கள் இடங்களில் வனவள பிரச்சனை மணலாற்றில் அப்பிரச்சனை இல்லை – விவசாய அமைச்சர்..!! (படங்கள்)

0

எங்கள் இடங்களில் வனவள பிரச்சனை இருக்கிறது ஆனால் பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றங்கள் நடைபெறும் மணலாற்றில் அப்பிரச்சனை இல்லை என்பது ஒரு பக்கசார்பான நிலைமையாகும் என வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்தார்.
இன்று வவுனியா தரணிக்குளத்தில் அப்பகுதி மக்களுடனான சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,

இப்பிரதேசத்தில் இருக்கின்ற மக்களிற்கு காணி இல்லை ஆனால் வேறு மாகாணங்களில் இருந்து குடியேற்றுகின்ற குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மணலாறு போன்ற இடங்களில் தொடர்ச்சியாக பெரும்பான்மை இன மக்களை குடியேற்றும் செயற்பாடு தொடர்ந்து நடைபெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இதவிர்ந்து கொக்கிளாய் பிரதேசத்திலே தமிழ் மக்களுடைய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் குடியேற விடாமல் பெரும்பான்மையின குடியேற்றங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் யுத்ததிற்கு முன்பு பாவித்த பல குளங்களையும் காணிகளையும் அங்கு குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின குடியேற்றவாசிகளிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலே இங்குள்ள மக்களிற்கு காணி கச்சேரி வைத்து காணி வழ்காமையானது ஒரு குறைபாடான நிகழ்வாகவே இருக்கின்றது. இவ்விடயங்களை நாங்களும் அரசியல் ரீதியாக அனுகி தீர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இங்குள்ள எம் மக்களும் காணியில்லை என்று இருப்பதை விட காணி கிடைக்க கூடிய இடங்களில் போய் இருப்பதுதான் சிறப்பானதாக இருக்கும். ஏன்எனில் அவர்கள் குடியேறுகிறார்கள் என்று விலகியிருந்தால் அவர்கள் அந்தகுடியேற்றங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். எங்கள் இடங்களில் வனவள பிரச்சனை இருக்கிறது ஆனால் பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றங்கள் நடைபெறும் மணலாற்றில் அப்பிரச்சனை இல்லை என்பது ஒரு பக்கசார்பான நிலைமையாகும். நாங்கள் சரியான அரசியல்ரீதியாக அணுக வேண்டிய தேவை இருந்தாலும் எந்த அரசு வந்தாலும் இதைதான் செய்துகொண்டு இருக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + thirteen =

*