;
Athirady Tamil News

யாழில் நினைவு கூறப்பட்ட சிறீ சபாரட்டனம் அவர்களின் 32வது வருட நினைவு அஞ்சலி..!! (படங்கள்)

0

யாழில் சிறீ தமிழீழ விடுதலை(Sri Telo) இயக்கத்தினால் நினைவு கூறப்பட்ட சிறீ சபாரட்டனம் அவர்களின் 32வது வருட நினைவு அஞ்சலி

இந்நிகழ்வு பற்றி மேலும் அறியவருவதாவது

இன்று(05.06.2018) மாலை 5மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னம் அவர்களின் 32வது வருட நினைவஞ்சலி நிகழ்வானது சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் சிறீசபாரட்னம் அவர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இடமாக கருதப்படும் யாழ் கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கையில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயரசா அவர்களின் ஆலோசனைக்கமைய சிறீரெலோ இளைரணியின் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த போராளிகளான சுபாஷ்,ரஞ்சன்(மாமா),அஜித்,சங்கர்,அல்பிரட்,வின்சன்ட் ஆகியோருடன் வவுனியா செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் அந்தோனி,செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் சிவசந்துரு,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான அதிர்ஷ்ட செல்வம்,விஜயகுமார் ஆகியோருடன் இளைஞரணி தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட தலைவர் சிறீசபாரட்னம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + fifteen =

*