;
Athirady Tamil News

தொழிலாளர் தின நிகழ்வுகள் நாளை ஆரம்பம்..!!

0

நாட்டின் பல பகுதிகளிலும் தொழிலாளர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை மாலை இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் நாளை மறுதினம் மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் நடத்தும் மே தினக் கூட்டங்கள், நாளை மறுதினம் கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*