;
Athirady Tamil News

டைனோசர்கள் பூமியில் இன்றும் உயிர் வாழ்கிறது: வெளியான ஆச்சரிய தகவல்..!!

0

டைனோசர்கள் எனப்படும் விலங்கு இனம் பரிணாம வளர்ச்சி பெற்று இன்றும் பூமியில் வாழ்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டைனோசர்கள் குறித்த ஆராய்ச்சிகள் பல காலமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பறவையின் படிமங்களை வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.

அதில், அந்த பறவையின் பற்கள் டைனோசர்களை போன்று மிகக் கூர்மையாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதோடு, தற்போது உள்ள பல்வேறு வகை பறவைகள், ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட பறவையின் உடலமைப்பு போன்றே இருப்பதும் தெரியவந்தது.

இதன்மூலம், சில வகை டைனோசர்கள் பரிணாம வளர்ச்சி பெற்று பறவைகளாக இன்றும் வாழ்ந்து வரலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + eighteen =

*