;
Athirady Tamil News

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் மொழிபெயர்ப்பாளர்கள்..!!

0

போரின்போது உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள பிரித்தானிய படைகளுக்கு பெரிதும் உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் மொழிபெயர்ப்பாளர்கள் இதர புலம்பெயர்ந்தோரைப் போலவே ஆளுக்கு 2,400 பவுண்டுகள் கட்டி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றும் இல்லையென்றால் அவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளதையடுத்து அவர்கள் அனைவரும் கலக்கமடைந்துள்ளனர்.

150க்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மொழிபெயர்ப்பாளர்கள் போரின்போது ஆப்கானிஸ்தான் மக்களுடன் பிரித்தானிய ராணுவ வீரர்கள் தொடர்பு கொள்வதற்கு உதவி செய்தார்கள்.

பிரித்தானியர்களுக்கு உதவியதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து கருதி அவர்கள் பிரித்தானியாவில் வாழ அனுமதிக்கப்பட்டனர்

ஆனால் தற்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஐந்தாண்டு குடியிருப்பு அனுமதி முடிவுக்கு வருவதால் அவர்கள் ஒன்று நாடு கடத்தப்படுவார்கள் அல்லது 2,400 பவுண்டுகள் கட்டி மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் தொகை மிகவும் பெரியது என்றும் அந்த தொகையை செலுத்தும் அளவிற்கு தங்களுக்கு வசதி இல்லை என்றும் மொழிபெயர்ப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும்படி மொழிபெயர்ப்பாளர்கள் உள்துறைச் செயலருக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்

திடீரென்று வெளியேற்றப்படும் பட்சத்தில் தாங்கள் ஒரு நிரந்தர வேலையைக் கண்டுபிடிப்பது கடினம் என்றும் தங்கள் எதிர்காலம் அந்தரத்தில் தொங்குவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தங்கள் நாட்டிற்கு திரும்பிச் சென்றால் பிரித்தானியருக்கு உதவியதால் தாங்கள் துரோகிகளாகக் கருதப்பட்டு ஆப்கானிஸ்தானில் கொல்லப்படுவது நிச்சயம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

போரில் பங்கு பெற்றவர்கள், அரசியல்வாதிகள் என 178,000 பேர் தங்கள் ராணுவத்திற்கு உதவிய உண்மையுள்ள மொழிபெயர்ப்பாளர்களை பிரித்தானியாவிலேயே வாழ அனுமதிக்குமாறு கோரி மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்

பாதுகாப்பு செயலர் ஆப்கன் மொழிபெயர்ப்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தைத் தள்ளுபடி செய்யுமாறும் அவர்கள் குடியுரிமை பெறும் நடைமுறைகளை எளிதாக்குமாறும் உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளார்.அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, மொழிபெயர்ப்பாளர்கள் ஆப்கனுக்கு திரும்பிச் செல்வதை பிரித்தானியா எதிர்பார்க்கவில்லையென்றும் அவர்கள் நிரந்தரமாக பிரித்தானியாவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + one =

*