;
Athirady Tamil News

பெண்கள் கழிவறை சுவற்றில் சடலமாக கிடந்த ஆண்: நடந்தது என்ன?..!!

0

கனடாவில் பெண்கள் கழிவறை சுவற்றில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்த நிலையில் அவர் இறப்பில் மர்மம் இல்லை என தெரியவந்துள்ளது.

அல்பெர்டா மாகாணத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்திருக்கும் பெண்கள் கழிவறையில் கடந்த வாரம் அடைப்பு ஏற்பட்ட நிலையில் பராமரிப்பு பணியாளர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் கழிவறையை ஒட்டிய சுவற்றை உடைத்து சோதனையிட முயன்ற போது சுவற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சடலத்தை அவர்கள் கைப்பற்றினார்கள்

இது கொலையாக இருக்குமா என முதலில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், இளைஞர் தானாக சிக்கி உயிரிழந்துள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த 27-ஆம் திகதி மாலை பெண்கள் கழிவறைக்குள் அங்கிருக்கும் காற்று வெளியேறும் ஓட்டை வழியாக இளைஞர் வர முயன்றுள்ளார்.

அப்போது அங்குள்ள சுவற்றில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் ஏன் இப்படி உள்ளே நுழைய முயன்றார் என தெரியவில்லை.

இதையடுத்து இது விபத்தால் ஏற்பட்ட மரணம் தான் என பொலிசார் கருதுவதால் உயிரிழந்த இளைஞர் குறித்த மற்ற விபரங்களை வெளியிடவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + fourteen =

*