;
Athirady Tamil News

கனடாவில் சந்தோஷமாக வாழும் சிரியா அகதிகள்..!!

0

பொருளாதார ரீதியில் சிரமங்கள் இருந்தாலும் கனடாவுக்கு வருகை தரவே சிரியா அகதிகள் விரும்புவதாக சமீபத்திய கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

கனடாவில் சிரியா அகதிகள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டாலும் வேலை கிடைக்காமல் வாழ்வாதாரத்திற்காக போராடினாலும் படிப்படியாக இங்கேயே தங்கிவிட விரும்புகிறார்கள். இன்னும் அதிக அகதிகள் கனடாவை தேடி தான் மகிழ்ச்சியோடு வருகிறார்கள் என வான்கோவரை சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்கண்ட தகவல் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்க உதவியுடன் பிரித்தானிய கொலம்பியாவிற்கு வந்த 241 சிரிய இளவயதினர்களை கொண்டு எடுக்கப்பட்ட ஒரு சிறிய கணக்கெடுப்பு மூலம் கிடைக்கப்பட்டது என தெரிய வருகிறது

அக்டோபர் 2015 மற்றும் பிப்ரவரி 2018 க்குள் கனடாவிற்கு வந்த 52,000 சிரிய அகதிகள் எண்ணிக்கை இதனை நிரூபிப்பதாக அகதி முகாம் அமைப்புகள் கூறுகின்றன.

குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு ஒரு முறை உணவு பொருள் வேண்டி நிவாரண மையத்திற்கு வருகை தரும் அகதிகள் எண்ணிக்கை கடந்த வருடத்தில் 66 சதவீதத்திலிருந்து 56 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததாக, பி.சி.யின் குடிவரவு சேவைகள் சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

அதே போல முழு நேர வேலைவாய்ப்பு விகிதம் இரு மடங்காக அதிகரித்து கடந்த ஆண்டு 27 சதவீதமாக உள்ளது.

அகதிகளில் 87 சதவீதம் பேர் ஆங்கிலத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் 97 சதவிகிதத்தினரின் குழந்தைகள் பள்ளியில் சிறந்து விளங்குவதாகவும் அறிக்கை கூறுகிறது.

இது பற்றி தீர்வு சேவைகள் இயக்குனர் கிறிஸ் Friesen கூறுகையில் கனடாவின் அரசாங்க உதவிகளை பெற அகதிகள் பல கடுமையான கட்டங்களை தாண்ட வேண்டும் என்றும் இதற்கான முழு ஒருங்கிணைப்பு ஏற்பட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும் என்றும் தெரிவித்தார்.இந்நிலையில் கனடாவில் குடியேறி விரைவாக ஆங்கிலம் கற்று வேலை கிடைத்து வரி செலுத்தவே அகதிகள் விரும்புவதாகவும் இவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வறிக்கை மேலும் வேறு சில விஷயங்களுக்கும் உதவியாக இருக்கிறது. அதன்படி சில அகதிகள் ஆங்கில மொழி வகுப்பிற்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் மேலும் சில அகதிகள் நடந்து முடிந்த அதிர்ச்சியினால் மன சோர்வு அடைந்திருப்பதாகவும் அவர்களுக்கு சில மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

கால்கரி கத்தோலிக்க குடிவரவு சங்கத்தின் தலைமை நிர்வாகியான Fariborz Birjandian கூறுகையில் பெரிய வாழ்க்கை மாற்றத்திற்காக காத்திருக்கும் அகதிகள் உடனடியான ஒருங்கிணைப்புகளை எதிர்பார்க்க கூடாது என்று தெரிவிக்கிறார்.

சில அகதிகள் ஆல்பர்ட்டாவில் வெவ்வேறு குடும்ப கலாச்சாரத்தைத் தழுவி தொடங்கிவிட்டனர். குறிப்பாக பெண்களுக்கு அதிக உரிமை உள்ள புதிய கலாச்சாரத்தை ஏற்க தொடங்கி விட்டனர்.அகதிகளில் 65 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் 17 வயதுக்குட்பட்டவர்கள். பெரியவர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் மொழிகளைக் கற்றுக்கொள்வதையும் புதிய கலாச்சாரங்களை ஏற்று கொள்வதையும் விரைவாக செய்கின்றனர். எனவே அவர்கள் குடும்ப ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

இந்த கணக்கெடுப்பு பற்றி COSTI குடிவரவு சேவைகளுக்கான நிர்வாக இயக்குனரான Mario Calla கூறும்போது டொரோண்டோவில் வேலை கிடைக்காத ஏமாற்றங்கள் அகதிகளுக்கு ஏற்படுகிறது. காரணம் ஆங்கிலம் இன்னும் முழுமையாக அவர்களுக்கு வரவில்லை. எனினும் வேலை செய்ய ஆர்வமாக இருக்கின்றார்கள். இருப்பினும் புதிய நாட்டில் அவர்களுக்கான இடத்தை கண்டுபிடிக்க கொஞ்ச காலம் எடுக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் டொரோண்டோவில் அதிக அளவில் தங்கி இருப்பதால் மற்ற அகதிகளை விட சிரியா அகதிகளுக்கான நெட்ஒர்க் என்பது வலுவானதாக இருப்பதாக சொல்கிறார். டொரோண்டோ அதிகமான அகதிகள் வருவாய் உள்ள நகரமாக பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.

நோவா ஸ்காட்டியாவை எடுத்துக் கொண்டால் பெரிய குடும்பங்களுக்கான வீடுகளை கண்டுபிடிப்பதில் அகதிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது என்றும் , மாற்று திறனாளிகளுக்கான ஆதரவு கிடைப்பதும் சிரமமாக இருப்பதாகவும் அதன் குடிவரவு சேவைகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி ஜெனிபர் வாட்ஸ் கூறினார்.

அகதிகள் பணிபுரியும் இடத்தில் ஒருங்கிணைப்பிற்கான தேவைகள் அதிகம் உள்ளதாக இவர் கூறுகிறார். அது அகதிகள் மாற்று சூழ்நிலையை ஏற்று கொள்ளும் பக்குவத்தை பொருத்தும் இருக்கிறது என்கிறார் இவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 3 =

*