;
Athirady Tamil News

திருமணமான இரு வாரங்களில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை: கடைசியாக பேசிய நெகிழ்ச்சி தருணம்..!!

0

அமெரிக்காவில் திருமணமான இரண்டு வாரத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராக்போர்ட் நகரை சேர்ந்தவர் ரிச் ஸ்டெபின்ஸ் (50), இவருக்கு நான்கு வாரங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரிச்சுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதையும் அது முற்றியுள்ளதையும் கண்டுப்பிடித்தனர்.

இந்நிலையில் தான் காதலித்து வந்த தனா பிசோலடோ (46) என்ற பெண்ணை மே மாதம் திருமணம் செய்ய ரிச் முடிவு செய்திருந்தார்

ஆனால் புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து மீண்டும் ரிச் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.இதன் காரணமாக தனாவை உடனடியாக திருமணம் செய்ய ரிச் நினைத்தார்.

அதன்படி கடந்த 19-ஆம் திகதி இருவரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் ரிச் – தனா திருமணம் நடைபெற்றது

பின்னர் அங்கேயே கேக் வெட்டி தம்பதிகள் மகிழ்ந்தனர்.இதன் பின்னர் ரிச் கூறுகையில், கடவுள் ஏதோ காரணத்துக்காக தான் என்னை உயிரோடு வைத்துள்ளார், என்னை யாரோ பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னரே நாங்கள் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என மனதில் தோன்றியதை பேசியுள்ளார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த இரு வாரத்தில் புற்றுநோய் முற்றியதன் காரணமாக ரிச் நேற்று உயிரிழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தார் கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*