;
Athirady Tamil News

131 இலங்கையர்களுடனான கப்பல் மலேஷியாவால் இடைமறிப்பு..!!

0

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நோக்கிச் சென்றதாக நம்பப்படும் 131 இலங்கையர்களைக் கொண்ட எண்ணெய்க் கப்பலொன்றை மலேஷியப் பொலிஸார் இடைமறித்துள்ளனர்.

குறித்த கப்பலில் 98 ஆண்களும் 24 பெண்களும் ஒன்பது சிறுவர்களும் இருந்துள்ளனர்.

மலேஷியாவின் தெற்கு மாநிலமான ஜொஹொர் மாநிலக் கடற்கரையிலேயே, எண்ணெய்க் கப்பலாக மேம்படுத்தப்பட்ட குறித்த கப்பலை கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் இடைமறித்ததாக மலேஷியாவின் தேசிய பொலிஸ் தலைவர் மொஹமட் புஸி ஹருன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், மொத்தமாக 127 இலங்கையர்கள் மலேஷியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்படவுள்ளதுடன், நான்கு இலங்கையர்கள் ஆட்கடத்தலுக்காக விசாரிக்கப்படவுள்ளதாக மொஹமட் புஸி ஹருன் மேலும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + seventeen =

*