;
Athirady Tamil News

வங்­கியில் கொள்­ளை­யிட முயற்­சித்த நபரை மடக்கிப் பிடித்த பாது­காப்பு ஊழியர்..!!

0

வத்­தளை எல­கந்த தனியார் வங்­கி­யொன்றில் பணத்தை கொள்­ளை­யிட்டு தப்பிச் செல்ல முற்­பட்ட சந்­தே­க­ந­பரை வங்கி பாது­காப்பு ஊழியர் ஒருவர் மடக்கிப் பிடித்து வத்­தளை பொலிஸில் ஒப்­ப­டைத்­துள்­ள­தாக வத்­தளை பொலிஸார் தெரி­வித்­தனர்.

வத்­தளை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட எல­கந்த பிர­தே­சத்­தி­லுள்ள தனியார் வங்­கி­யொன்றில் மதிய நேரத்தில் பெண் ஊழி­யரின் கண்­ணுக்கு மிளகாய் தூள் வீசி கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 11,082,160 ரூபா பணத்தை கொள்­ளை­ய­டித்­து­ தப்பிச் செல்ல முற்­பட்­டுள்ளார்.

இதன்­போதே குறித்த சந்­தே­க­ந­பரை வங்கி பாது­காப்பு ஊழியர் இன்­னு­மொ­ரு­வரின் உத­வி­யுடன் மடக்கிப் பிடித்து வத்­தளை பொலி ஸில் ஒப்­ப­டைத்­துள்ளனர். ரக்­க­ஹ­வில பிர­தே­சத்தைச் சேர்ந்த 30 வய­து­டைய ஆணொ­ரு­வரே இவ்­வாறு மடக்கி பிடிக்­கப்­பட்­டுள்ளார்.

குறித்த சந்­தே­க­ந­பரால் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பணமும் பொலிஸில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள நிலை யில், அவரை கைது­செய்த பொலிஸார் நேற்றுமுன்தினம் (04/05/2018) வத்­தளை நீதிவான் நீதி­மன்­றத்தில் அவரை ஆஜர்படுத் தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + seventeen =

*