;
Athirady Tamil News

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு..!!

0

மட்டக்களப்பு, கித்துள் கார்மலைப் பகுதியில் காட்டு யானை வழிமறித்துத் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று நடந்த சம்பவத்தில் செங்கலடி – குமாரவேலியார் கிராமம் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான நாகண்டாப்போடி சங்கரப்பிள்ளை (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது மாடுகளை பட்டிக்கு மேய்த்துச் சென்ற வேளை திடீரென வழிமறித்த காட்டு யானைகளில் ஒன்று முதியவரை விரட்டிச் சென்று தாக்கியது என்று தெரிவிக்கப்படுகிறது.

கரடினாறு பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச மருத்துவனையில் சேர்ப்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 14 =

*