;
Athirady Tamil News

ஓட்டு வங்கி அரசியலுக்காக சுல்தான்களின் பிறந்தநாளை கொண்டாடும் காங்கிரஸ் – மோடி தாக்கு..!!

0

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:-

நாம் யாருடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டுமோ? யாருக்கு மரியாதை அளிக்க வேண்டுமோ? தலைமுறை தலைமுறையாக நமக்கு ஊக்கசக்தியாக இருந்து வருபவர்களின் பிறந்தநாட்களை கொண்டாடுவதில்லை என்பது இங்குள்ள காங்கிரஸ் அரசின் முடிவாக உள்ளது.

சித்ரதுர்காவை ஆட்சி செய்த கடைசி மன்னர் வீர மடகாரி நாயக்கர் மற்றும் அவரது பேர்ப்படையில் இடம்பெற்றிருந்த தலித் வீராங்கணை ஒனாகே ஒபாவா போன்றவர்களை காங்கிரசார் மறந்து விட்டனர். ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக சுல்தான்களின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாடுவதன் மூலம் கர்நாடகம் மற்றும் சித்ரதுர்கா மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் அவமதித்து விட்டது. சித்ரதுர்கா பகுதியை ஆண்ட நாயக்கர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்றவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதால் இந்த மண்ணையும், உங்களையும், வரலாற்றையும் இவர்கள் இழிவுப்படுத்தி விட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*