;
Athirady Tamil News

கர்நாடகா தேர்தலில் 5 மந்திரிகள் தோற்பார்கள் – காங்கிரஸ் ஆய்வில் தகவல்..!!

0

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றவும் போராடி வருகிறது. இதற்காக இரு கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே கருத்து கணிப்புகள் மற்றும் ஆய்வு பணியை மேற்கொண்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இரண்டு ஆய்வும், மாநில காங்கிரஸ் ஒரு ஆய்வையும் நடத்தியது.

இந்த கருத்து கணிப்பில் சித்தராமையா மந்திரி சபையில் உள்ள 5 மந்திரிகள் தோல்வி அடைவார்கள் என்று தெரிய வந்துள்ளது. பிரியங்கார்கே, எம்.பி.படேல், மஞ்சு, ரோசன் பெய்க், வினய் குல்கர்னி ஆகிய 5 மந்திரிகள் வெற்றி பெற மாட்டார்கள் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்தது. இவர்களுக்கு எதிரான அலை வீசுவதால் அவர்கள் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் மெஜாரிட்டி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில காங்கிரஸ் கருத்து கணிப்பில் 125 இடங்களும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கணிப்பில் 120 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #KarnatakaElection2018 #Congress

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + three =

*