;
Athirady Tamil News

நாளை வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு..!!

0

சர்வதேச தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக நாளை (திங்கட்கிழமை) ஏறாவூர் பொதுச் சந்தை உட்பட சகல வர்த்தக நிலையங்களும் மூடப்படவுள்ளதாக ஏறாவூர் வர்த்தக சங்கத்தின் தலைவர் முஹம்மத் இனாயத்துல்லாஹ் தெரிவித்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட மே தின விடுமுறை தொடர்பிலான அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி ஏறாவூர் நகர பொதுச் சந்தை மற்றும் நகரின் சகல வர்த்தக நிலையங்களும் நாளை முழுநாளும் மூடப்படும் எனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் இம்முறை மே தின விடுமுறை 7ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதால் ஏறாவூர் வர்த்தகர்களும் தொழிலாளர்களும் அதனைக் கருத்திற்கொண்டு தமது வர்த்தக நிலையங்களைப் பூட்டி தொழிலாளர்களின் நலன் காக்கத் தீர்மானமெடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*