;
Athirady Tamil News

கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களை மரியாதையுடன் அழைக்க வேண்டும்- கமல்ஹாசன்..!!

0

மக்கள் நீதி மய்யத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. இதில் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட பலர் பங்கேற்றனர். இவர்களுடன் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் உரையாடினார்.

கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அரசியலில் ஈடுபடுவதற்கு பெண்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. நமது கட்சியில் இணைய அதிக அளவில் பெண்கள் விரும்புகிறார்கள். எனவே பெண்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு கட்சியினர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மய்யம் விசில் செயலி கட்சிக்கு உதவுவதோடு, தமிழகத்தை சீர்திருத்தம் செய்யவும் பயன்படும். கடந்த சில ஆண்டுகளாக சரிவர நடைபெறாத கிராம சபை கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

கட்சியில் உள்ள நிர்வாகிகள், அமைச்சர்களை குறிப்பிட்டு பேசும் போது மரியாதையுடன் குறிப்பிட வேண்டும். அரசியலில் இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. எனவே மக்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளில் நாம் ஈடுபட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 14 =

*