;
Athirady Tamil News

வடக்கின் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாது! – வியாழேந்திரன் எம்.பி..!!

0

கிழக்கில் மூவின மக்களும் இணைந்து வாழ்வதால், வடக்கு மாகாணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கு திறப்பு விழாவும் விளையாட்டு விழாவும் நேற்று (சனிக்கிழமை) மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டிய வியாழேந்திரன், கிழக்கிலிருக்கின்ற தமிழ் தலைமைகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைய வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார். இல்லாவிட்டால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழர்கள் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படுமென எச்சரித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் சில முரண்பாடுகள், பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றதென்றும் இவ்வாறான பிரிவினைகளால் மாற்றுச் சமூகத்தவர் வளர்ந்துகொண்டு செல்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கென தனியான அமைச்சுக்கள் இல்லையென சுட்டிக்காட்டிய வியாழேந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகள், பிரதேச அபிவிருத்தி என்பவற்றை கவனத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் தலைமைகள் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*