மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீதியை கடக்க முயற்சித்த மாணவி மரணம்..!!

மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீதியை கடக்க முயற்சித்த மாணவியொருவர், பேருந்தில் மோதி மரணமடைந்தார்.
கேகாலை நகரில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி தனது பாட்டியுடன் மேலதிக வகுப்பிற்கு செல்லும் வழியிலேயே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதன்போது காயமடைந்த மாணவியின் பாட்டி கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கேகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.