;
Athirady Tamil News

தினேஸ் கார்த்திக்கின் போராட்டம் வீண்..! 3வது வெற்றியை சுவைத்தது மும்பை..!!

0

2018 இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இப்போட்டி இடம்பெற்றது.

மும்பையில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதற்கமைய முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்று கொண்டது.மும்பை அணி சார்பாக சூர்ய குமார் யாதவ் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

இந்தநிலையில், பதிலளித்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.அவ்வணி சார்பில் ரொபின் உத்தப்பா 54 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

அணித்தலைவர் தினேஸ் கார்த்திக் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களைப் பெற்றார்.பந்து வீச்சில் ஹார்திக் பாண்டியா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.இந்த வெற்றியை தொடர்ந்து 9 போட்டிகளில் பங்கேற்று 3 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ள மும்பை; அணி புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இதேவேளை, ஐபிஎல் தொடரின் 38 ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இன்று இரவு மோதவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 6 =

*