;
Athirady Tamil News

எலித்தொல்லையால் அவதியுறும் இத்தாலியர்கள்: மேயர் கண்டுபிடித்த வேடிக்கையான தீர்வு..!!

0

இத்தாலியில் ஃபர் உடை தயாரிப்பதற்காக தென் அமெரிக்காவிலிருந்து Coypu எனப்படும் ஒரு எலி இனத்தை சேர்ந்த விலங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் மக்களுக்கு ஃபர் மோகம் குறையவே Coypu மறக்கப்பட்டது. ஆனால் அவை குழிகளைத்தோண்டவும் பயிர்களை உண்ணவும் தொடங்கி விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையாகி விட்டன. அவைகளை ஒழிக்க ஏதேதோ முயற்சிகள் எடுத்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை.

ஏனெனில் ஒரு பெண் Coypu ஒரு முறைக்கு 12 குட்டிகள் வரை போடக்கூடியது. இந்த நிலையில் Gerre de’ Caprioli என்னும் நகரின் மேயர் Coypuவை ஒழிக்க ஒரு வித்தியாசமான வழியைக் கண்டு பிடித்திருக்கிறார்
“Can’t Beat’em, Eat’em,” என்பதுதான் அது. அதாவது அவைகளை ஒழிக்க முடியவில்லை என்றால் நமது உணவகங்களிலும் கிராம உணவு திருவிழாக்களிலும் அவற்றை உண்ணுவோம் என்கிறார் அவர்.

நான் ஒன்றும் வேடிக்கைக்கு கூறவில்லை, நானே அதை சாப்பிட்டிருக்கிறேன், அது முயல் கறியை விட சுவையாக இருக்கிறது என்கிறார் அவர். அவருக்கு ஆதரவளிப்பதைப்போல இன்னொரு பேக்கர், Coypuக்கள் சுத்த சைவம் எனவும் தாவரங்களை மட்டுமே அவை உண்ணக்கூடியவை எனவும் கூறியுள்ளார்.

தான் அவற்றை குழம்பு செய்தும் அவனில் வேக வைத்தும் சாப்பிட்டுள்ளதாகவும், மேயர் சொல்வதுபோல் அவை உண்மையாகவே முயல் கறியை விட சுவையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + one =

*