;
Athirady Tamil News

தன்னை வளர்த்தவருக்காக 12 மணி நேரம் இரயில் நிலையத்தில் காத்திருக்கும் நாய்: உருக வைக்கும் நிகழ்வு..!!

0

சீனாவில் தன்னை வளர்த்து வரும் எஜமானுக்காக 12 மணி நேரம் நாய் இரயில் நிலையத்தில் காத்திருக்கும் சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்தவர் Mr. Chen, இவர் Xiongxiong என்ற 15 வயதுடைய நாயை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் Mr. Chen தன்னுடைய வேலைக்காக தினந்தோறும் காலை 7 அல்லது 8 மணிக்கு Chongqing’s பகுதியின் Yuzhong-ல் உள்ள Liziba இரயில் நிலையத்திற்கு சென்றுவிடுவார்

அவருடன் Xiongxiong என்ற நாயும் உடன் வரும். அவர் இரயிலில் ஏறி சென்ற பின் வரும் வரை அதாவது சுமார் 12 மணி நேரம் காத்திருந்து அவர் வந்த பின்பே வீட்டிற்கு செல்கிறது.இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

இது குறித்து Mr. Chen கூறுகையில், எனக்கும் -க்கும் இடையேயான உறவு எப்படி இந்தளவிற்கு வளர்ந்தது என்று தெரியவில்லை, வயதாகி வரும் நிலையில் நான் இல்லை என்றால் அது எப்படி வாழப்போகிறது என்பது தெரியவில்லை. மிகவும் கவலையாக இருக்கிறது.

ஆனால் இருக்கும் வரை மகிழ்ச்சியாக பாத்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இதே போன்று கடந்த 1921-ஆம் ஆண்டு Akita என்ற நாய் ஜப்பானின் Shibuya இரயில் நிலையத்தில் தனது எஜமானிற்காக 12 மணி நேரம் இரயில் நிலையத்தில் காத்திருந்து அதன் பின் அவர் வந்த பின்பு வீட்டிற்கு செல்லும்

1925-ஆம் ஆண்டு அவர் இறந்ததையடுத்து, அந்த நாய் தொடந்து இரயில் நிலையத்திற்கு வந்த நின்று பார்த்துக் கொண்டே இருந்தது. இருப்பினும் அவர் இறந்த அடுத்த பத்து வருடங்களில் அந்த நாயும் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 8 =

*