;
Athirady Tamil News

8 வயது குறைவான நபரை மணந்த பெண்: வரதட்சணையாக எவ்வளவு பெற்றார்?..!!

0

மலேசியாவில் தன்னை விட எட்டு வயது குறைவான இளைஞரை பாடகி ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நிடா ஹம்சா (37) என்ற பாடகியும் முகமது பரிஸ் (29) என்ற இளைஞரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார்கள்.

நிடாவை விட பரிஸ் எட்டு வயது இளையவர் என்ற போதிலும் காதலர்கள் அதை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கணவரிடமிருந்து வரதட்சணையாக 10,000 ரிங்கட்டையும் இதோடு தனியாக 300 ரிங்கட்டையும் நிடா பெற்றுள்ளார்

நிடா கூறுகையில், பரிஸ் மிகவும் பொறுமை சுபாவம் கொண்டதோடு நேர்மறையான எண்ணம் கொண்டவராவார். நான் கோபமாகவோ அல்லது மன அழுத்தமான நிலையில் இருக்கும் போதோ அவர் என்னை அமைதியாக்கி விடுவார் என கூறியுள்ளார்.

பரீஸ் கூறுகையில், நிடாவை மனைவி என அழைப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன், நான் அவரை சந்தித்ததிலிருந்து என் வாழ்க்கை மிகவும் உறுதியாக மாறியுள்ளது.

நிடா என்னை விட வயதில் மூத்தவராக இருக்கலாம், ஆனால் ஒரு கணவனாக அவளோடு சேர்ந்து வாழ்க்கையை நடத்துவது என் கடமை.அவரின் இசை வாழ்க்கைக்கும் நான் உறுதுணையாக இருப்பேன் என கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − fifteen =

*