;
Athirady Tamil News

திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான பெண்: கணவரிடம் மறைக்க செய்த செயல்..!!

0

ஜிம்பாப்வேயில் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான பெண் அதை கணவரிடமிருந்து மறைப்பதற்காக பெற்ற குழந்தையை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரேஸ் முக்வேனா (23) என்ற பெண்ணுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் டோல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போதே கிரேஸ் ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், அந்த கர்ப்பத்துக்கு தவுரி சிட்சா என்ற இளைஞர் காரணமாக இருந்துள்ளார்.

ஆனால் தனது கர்ப்பத்தை கணவர் டோலிடம் மறைத்து வந்த கிரேஸுக்கு கடந்த 27-ஆம் திகதி இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதயடுத்து நைசாக கணவருக்கு தெரியாமல் வீட்டு கழிப்பறைக்குள் சென்ற கிரேஸ் பெண் குழந்தையை அங்கேயே பெற்றெடுத்துள்ளார்.

இந்த விடயம் தனது கணவருக்கு தெரிந்தால் தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவார் என பயந்த கிரேஸ் குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார்.

இந்நிலையில் தனதருகில் படுத்திருந்த கிரேஸ் வெகுநேரமாக மீண்டும் வராததால் சந்தேகமடைந்த டோலி கழிப்பறைக்கு சென்ற நிலையில் குழந்தை ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளது.

இதையடுத்து குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அது இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் கிரேஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.தற்போது அவர் ஜாமீனில் வெளியில் வந்திருக்கும் நிலையில் அடுத்த வாரம் மீண்டும் நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*