;
Athirady Tamil News

பாகிஸ்தான் உள்துறை மந்திரி மீது துப்பாக்கிச் சூடு – காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!

0

பாகிஸ்தான் நாட்டு உள்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் அஹ்சன் இக்பால்(59). ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த இவர், இன்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்குட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது, ஒரு வாலிபர் அவரை நோக்கு துப்பாக்கியால் சுட்டார். குறிதவறி பாய்ந்த துப்பாக்கி தோட்டா அஹ்சன் இக்பாலின் வலதுகை தோள்பட்டயை பதம் பார்த்தது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், காயமடைந்த அஹ்சன் இக்பால் நாரோவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.#Pakistaninteriorministershot #AhsanIqbal

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*