;
Athirady Tamil News

கடந்த நிதி ஆண்டில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.42½ கோடி..!!

0

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு ஆஜராகும் வக்கீல்களுக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் செலவு செய்யும் தொகை அதிகரித்து வருகிறது. 2011-12-ம் நிதி ஆண்டில் வக்கீல்களின் தொழில்முறை கட்டணம் உள்ளிட்ட செலவு ரூ.10.99 கோடியாக இருந்தது. 2012-13-ம் ஆண்டில் ரூ.11.73 கோடியாகவும், 2013-14-ம் ஆண்டில் ரூ.14.47 கோடியாகவும் அதிகரித்தது. கடந்த நிதி ஆண்டில் வழக்கு செலவுக்காக பிப்ரவரி 22-ந் தேதி வரை சுமார் ரூ.42.40 கோடியை மத்திய அரசு செலவிட்டதாக சட்ட அமைச்சகம், பாராளுமன்ற குழுவிடம் அறிக்கை சமர்பித்து உள்ளது. வழக்கு செலவு அதிகரிப்புக்கு உயர் மதிப்பு ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவையை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதே காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசை ஒரு மனுதாராக சேர்த்து 4 ஆயிரத்து 229 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 22-ந் தேதி வரை 859 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 10 =

*