;
Athirady Tamil News

முகேஷ் அம்பானி மகளுக்கும் இந்த ஆண்டில் திருமணம் – பிரபல தொழிலதிபர் மகனை கரம் பிடிக்கிறார்..!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீத்தா அம்பானி. இந்த தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, இஷா அம்பானி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமலை காதலித்து வருகிறார்.

நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் அண்மைக் காலமாக காதலித்து வருவதாகவும், இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு குடும்பத்தினரும் நேற்று மும்பையில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு சென்றனர். இவர்களது திருமணம் டிசம்பரில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்த் பிரமலின் தந்தையான அஜய் பிரமல் மிகப்பெரிய தொழிலதிபர். அவர், நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமல் நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த், தனது தந்தையின் நிறுவனத்தை கவனித்து வருவதைத் தவிர, புதிதாக இரண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பிரமல் நிறுவனம் தற்போது மிகப்பெரிய தொழில் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

முகேஷ் அம்பானியின் மூத்த மகன், ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தா – மோனா மேத்தா தம்பதியரின் இளைய மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இந்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MukeshAmbani #IshaAmbani #AnandPiramal #Piramalgroup

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*