விருந்துபசாரத்திற்கு சென்றவர் சடலமாக மீட்பு..!!

புத்தள, ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 122ம் கட்டை அருகிலிருந்து சடலம் ஒன்றை பொலிஸ் நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
ஒக்கம்பிட்டிய பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சமன் அநுரகுமார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (06) இரவு விருந்துபசாரம் ஒன்றிற்கு சென்று கெப் வாகனம் ஒன்றில் மீண்டும் வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில் வாகனத்தில் இருந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் சடலம் ஒக்கம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று (07) நடைபெற உள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.