;
Athirady Tamil News

வவுனியாவில் பனைவளம் காப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியாவில் சுயாதீன தமிழ் இளைஞர் ஏற்பாட்டில் அழிந்து வரும் பனை வளத்தை காக்க விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நெளுக்குளம் பகுதியில் இன்று (07) நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இளைஞர்கள் பூமித்தாயின் நீர்வளம் காக்கும் பெரும் புல்லினம் பனை, பனை உற்பத்திகளை பெருக்கவோம் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம், நூறு பனை மரம் ஒரு காட்டிற்கு சமம், பனை விதை நடுவோம் பனை வளம் காப்போம், பனைவளப் பொருளாதாரம் எங்கள் மூலப்பொருளாதாரம் போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

தமிழ் மக்களின் அடையாளமாக விளங்குகின்ற பனை வளம் அழிக்கப்பட்டு வருவதால் நீர்பற்றாக்குறை ஏற்பட்டு வரட்சி நிலை ஏற்பட்டு வருகின்றது. அதை நம்பிய குடும்பங்களின் சுயசார்ப்பு பொருளாதார கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளது. இதனால் பனைவளத்தை காத்து எமது இருப்பை பாதுகாப்போம் எனத்தெரிவித்தே இளைஞர்கள் இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்தொடர்ச்சியாக வடக்கு இளைஞர்கள் பலர் ஒன்று கூடி மாலை மன்னார், நானாட்டான் பகுதியில் நுங்குத்திருவிழா என்னும் பெயரில் பனைசார் உற்பத்திப் பொருட்கள், பனம்பொருட்களுடன் விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*