;
Athirady Tamil News

சில்லாலை முத்துமாரியம்பாள் ஆலய புதுவருட விளையாட்டு விழா..!! (படங்கள்)

0

சில்லாலை முத்துமாரியம்பாள் ஆலய புதுவருட விளையாட்டு விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

சில்லாலை முத்துமாரியம்பாள் ஆலய புதுவருட விளையாட்டு விழா நேற்று 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 07 மணியளவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக பிரதேச சண்டிலிப்பாய் பிரதேசசெயலக கலாசார உத்தியோகத்தர் வே.தர்மபாலன், மற்றும் கிராம உத்தியோகத்தர்களான க.சுதர்சன், க.அருள்ஞானானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. விளையாட்டுக்களில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் விருந்தினர்களுடன், இளைஞர்கள். பொதுமக்கள், ஊரவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + eleven =

*