;
Athirady Tamil News

மேற்கு வங்கத்தில் பிரியாணி சாப்பிட்ட 41 மாணவிகள் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!

0

மேற்கு வங்க மாநிலம் ஹீக்ளி மாவட்டத்தில் உள்ள சந்திராநகர் பகுதியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவிகளுக்கு வெளி உணவகத்தில் இருந்து உணவு வாங்கி வந்துள்ளார். அதை நேற்று இரவு சாப்பிட்ட சுமார் 41 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து உடனடியாக மாணவிகள் அனைவரையும் விடுதி ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸ் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் வெளி உணவகத்தில் இருந்து பாதுகாப்பில்லாத பிரியாணியை வாங்கி வந்து சாப்பிட்டதாலேயே திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர்களில் பெரும்பாலான மாணவிகள் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*