;
Athirady Tamil News

கும்பகோணத்தில் கோவில் விழாவில் தந்தை- மகனை வெட்டி கொன்ற கும்பல்..!!

0

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டிபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மகன் முருகன்(வயது47). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடந்தது. திருவிழாவில் முருகன் தரப்பினரும், சக்திவேலு தரப்பினரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 2 தரப்பினருக்கும் இடையே நேற்று மதியம் திடீரென மோதல் ஏற்பட்டது.

அப்போது சக்திவேல் தரப்பை சேர்ந்தவர்கள் முருகன், அவருடைய மகன் அர்ஜுன் (25), முருகனின் தம்பி ரஞ்சித்குமார் (35) ஆகிய 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அர்ஜுன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.

அதைத்தொடர்ந்து அர்ஜுனின் தந்தை முருகனும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதனிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக கும்பகோணம் வட்டிபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், அவருடைய தம்பி வளர்ச்செல்வன், வளர்ச்செல்வனின் மகன்கள் ராஜவேல், வைரவேல் ஆகிய 4 பேர் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + twenty =

*