;
Athirady Tamil News

லஞ்சம் பெற்ற அரச அதிகாரிகள் 11 பேர் கைது..!!

0

இந்த வருடம் கடந்த 4 மாத காலப்பகுதிக்குள் இலஞ்சம் பெற்ற அரச அதிகாரிகள் 11 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

இதில் அரச தலைவர் செயலக பிரதானியும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவரும் அடங்குவர். இவர்கள் தவிர கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் பொலிஸ் அதிகாரிகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லஞ்சம் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் இருப்பின் 1954 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் நெவில் குருகே அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*