;
Athirady Tamil News

30 வருடங்கள் செய்யாதவை 3 வருடங்களில் நிறைவடைந்துள்ளது : மனோ கணேசன்..!!

0

இந்த நாட்டில் 30 வருடங்கள் சிலர் செய்யாதவற்றினை 3 வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக செய்துள்ளோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது,

த.மு.கூட்டணியே முதன் முதலாக மலையக மக்களின் பிரச்சினையை ஆராய்ந்து அதற்காக தீர்வு ஒன்றை காணும் வகையில் தனி வீடுகளை அமைத்து 7 பேர்சர்ஸ் காணிக்குரிய உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

அதேவேளையில் அம்பகமுவ, நுவரெலியா பிரதேசத்தில் காணப்பட்ட பிரதேச சபைகளை இன்று விரிவுப்படுத்தி 6 சபைகளை உருவாக்கிய பெறுமையும் த.மு.கூட்டணியை சாரும்.

மலையகத்திற்கென புதிதாக அதிகார சபை ஒன்றை அமைப்பதற்குரிய அமைச்சரவை தீர்மானத்தை எடுக்கவிடுக்கின்றோம். சுதந்திரமான மலைநாடு ஒன்றை நாம் உருவாக்க இருக்கின்றோம்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மலையகம் சார்ந்த நுவரெலியா, பதுளை, இரத்தனபுவரி, கேகாலை, கொழும்பு ஆகிய பகுதிகளில் எமது உறுப்பினர்களாக 110 உறுப்பினர்களை வென்று த.மு.கூட்டணி சாதனைப்படைத்துள்ளது.

இவை அனைத்தும் மக்களின் சக்தியால் எமக்கு கிடைத்ததாகும். இன்று தோட்டப்பகுதிகளில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக காணிகளை பெறுவதற்கான அமைச்சரவை தீர்மானத்தையும் வெகுவிரைவில் பெறவிருக்கின்றோம்.

தடைப்பட்டிருந்த இந்திய அரசாங்கத்தின் வீடு அமைப்பையும், மலையக மக்களுக்காக பெற்ற பெறுமையும் தமிழ் முற்போக்கு கூட்டணியே சாரும் என தெரிவித்த இவர் இவ்வாறாக மலையக மக்களுக்கு 3 வருட காலப்பகுதியில் படிப்படியாக அவர்களின் தேவை உணர்ந்து நாம் சேவை செய்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + fourteen =

*