;
Athirady Tamil News

இ.தொ.க – முற்போக்கு கூட்டணிக்கிடையில் மோதல்..!! (படங்கள்)

0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தலவாக்கலை ஹட்டன் வீதியில் தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திற்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) மாலை இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நடைபெறும் மே தின நிகழ்வினை முன்னிட்டு மலையகத்தின், தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின நிகழ்வும், நுவரெலியாவில் இ.தொ.காவின் மேதினம் இடம்பெற்றது.

இந்த கூட்டம் நிறைவடைந்து ஹட்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சென்ற இ.தொ.கா ஆதரவாளர்கள் அடங்கிய பேரூந்தில் உள்ளவர்கள் கோஷமிட்டதாகவும், இதனை எதிர்த்து த.மு.கூட்டணியின் ஆதரவாளர்கள் சிலர் அவர்களை மறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதால் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் இந்த மோதலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*